Saturday, 11 February 2017

இருதய செயலிழப்பு , நுரையீரல் கோளாறு மற்றும் இரத்தசோகை

இருதய செயலிழப்பு , நுரையீரல் கோளாறு  மற்றும் இரத்தசோகை
ஆங்கிலம்: மருத்துவர் அமர். டி. நிகாம்
(Source: Homeopathy, The art of rapid & Gentle healing)

துயரர்-6

ஒரு  70-வயது ஆண் துயரர். அவருக்கு நுரையீரலில் நீர்கோர்த்து மூச்சுவிடுவதில் சிரமத்துடன்  இருதயத்தின் இரத்தக்குழாய்  கோளாறு  மற்றும் கடுமையான இரத்தசோகையும் இருந்தது ( மலக்குடலின் வழியாக அதிக இரத்தம் வெளியேறியதால் ). அவருடைய இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 5.6 கிராம் இருந்தது. அவருடைய மற்ற தொல்லைகள் இதோ:

Ø  சளித்தொல்லை; மஞ்சள் நிறத்தில் வெளிப்பாடு. <  சாப்பிடும் பொழுது ; < அறையினுள் இருக்கும் பொழுது.
Ø  கீழ் கண் இமைகளிலும் , பாதங்களிலும் நீர்வீக்கம்.
Ø  15-20 ஆண்டுகளாக மூச்சுத்தி திணறல். < மேலே ஏறும் பொழுது ; < நடக்கும் பொழுது.
Ø  மலங்களிக்க முயலும் பொழுது மலக்குடலில் இருந்து இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படும். < இனிப்புப்பண்டங்கள் (வெல்லம்) சாப்பிடுவதால் ; < ஊறவைத்த அரிசி உணவு.
Ø  சுக்கிலசுரப்பியில் சீழ்பிடித்து புண்ணாகியிருத்தல்.


தலைமைக்குறிகள்(GENERALS):

Ø  தாகம்: தாகமின்மை.
Ø  விருப்பம்: பழங்கள் , பதப்படுத்திய பழங்கள், எண்ணெய் , வேகவைக்காத உணவு , மற்றும் பால் சாப்பிட விருப்பம்.
Ø  உணவு: ஊறவைத்த அரிசி உணவு சாப்பிட்டால் மலக்குடலில் இருந்து இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படும்.
Ø  சிறுநீர்: இரவில் மூன்று முதல் நான்கு தடவை சிறுநீர்கழித்தல்.
Ø  வியர்வை : முகத்தில் வியர்வை அதிகம் ; சாப்பிடும் பொழுது அதிகரிக்கும்.
Ø  தூக்கம்: உட்கார்ந்திருக்கும் பொழுது தூக்கக் கலக்கம்.
Ø  உடல்வாகு (தட்பவெப்பநிலை): வெப்ப உடல்வாகு.


நுட்பக்கவனம் (OBSERVATION) :

அந்தத் துயரர் தமது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருக்கு பெரிய மூக்கு மற்றும் காதுகள். அகன்ற நெற்றி. தலையில் காந்திக்குல்லா அணிந்திருந்தார் ( பொதுவாக காந்தீயக் கொள்கையில் ஈடுபாட்டுடன் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களே இது போன்ற காந்திக்குல்லா மற்றும் நேரு அங்கி போன்றவற்றை அணிவார்கள்). நோய்த்தாக்குதல் தீவிரமாக இருந்தபொழுதும் அவருடைய உடையலங்காரம் மனக்கிளர்ச்சியைத் தூண்டத்தக்க வகையில் இருந்ததுஅவர்  பார்ப்பதற்கு  மிக ஒழுங்காக இருந்தார். அதே சமயத்தில்  மிக கொஞ்சமாகவே  பேசினார். பேசும் பொழுது மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதைக் காண முடிந்தது. அவருடைய உதடுகள் மற்றும் கண்ணிமைகள் வீங்கியிருந்தன.மற்ற  விபரங்களை அவரும், அவருடைய உறவினர்களும் நேர்முக உரையாடலின் போது கீழ்வரும் விதமாகத் தெரிவித்தனர்.

கேள்வி: உங்களுடைய சுபாவம் எப்படி? ( இந்த கேள்விக்கு அவருடைய உறவினர் பதில் கூறினார்).

உறவினர்: அவர் விடாமுயற்சியுடைய கடுமையான உழைப்பாளி. யாராவது அவருடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் அவர் நல்ல விதமாகவே நடந்து கொள்வார். அவருக்கு மூன்று சகோதரர்கள். இவரே கடைசி. இவருடைய இரண்டாவது அண்ணன் இறந்துவிட்டார். அம்மாவும் இவருடைய சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அப்பா 1951 இல் இறந்தார். பத்தாம்வகுப்பு வரை  படித்துள்ளார். கிராமப்பகுதியில் வாழ்வதையே அவர் விரும்புவார். திருமணத்திற்குப் பிறகே அவரது சகோதரர்களை விட்டுப் பிரிந்து புனாவிற்கு வந்து குடியேறினார்.

கேள்வி: எப்பொழுது திருமணம் செய்தீர்கள் ?

துயரர்: 1948 இல் . சில வருடங்களுக்குப் பிறகு , எனது குழந்தைகளின் படிப்பிற்காக புனா வந்துவிட்டேன். இங்கே , ஐந்து சைக்கிள்களுடன் எனது வியாபாரத்தைத் தொடங்கினேன். பின்னர்இன்னும் சில சைக்கிள்களை வாங்கினேன். என் வீட்டிற்கு வந்து யாரும்  பணம் கேட்பது எனக்குப் பிடிக்காது. அதனால் பணத்தை அவர்கள் திருப்பித் தர சொன்ன நாளில் தவறாமல் நானே தந்து விடுவேன் ( அவர் சைக்கிள் கடை வைக்க கடன் வாங்கியிருந்தார்).

உறவினர்: அவர் தனிமனிதராகவே எல்லா வியாபாரங்களையும் கவனித்துக்கொண்டு அதை விரிவாக்கமும் செய்தார். ஆனால் தடங்களுடன் தான் ஆரம்பித்தார்.

துயரர்: எனக்கு மூன்று குழந்தைகள் . மூத்தவன் பொறியாளர்அடுத்து மகள்- மருத்துவர். அடுத்தவன் குத்தகைக்காரன். நான் புனாவில் பதினைந்து ஆண்டுகள் தொழில் செய்தேன் . பின்னர் அதை விட்டுவிட்டேன்.

கேள்வி: ஏன் தொழிலை மூடிவிட்டீர்கள்?

உறவினர்: அவரது கடையை , அவருடைய மகளுக்குக் கொடுத்துவிட்டார். அவரால் அக் கடையை சரிவர கவனிக்க இயலாததால் வியாபாரம் சரிந்து ஏழ்மை நிலைக்கு வந்துவிட்டார். அவர் , படிக்காதவராக இருந்தாலும் தமது குழந்தைகளை உயர் கல்வி கற்க வைத்தவர். அவருடைய சகோதரர்கள் இவர் படிப்பதை அனுமதிக்கவில்லை.

கேள்வி: நீங்கள் எப்பொழுது பதட்டமடைவீர்கள்?

உறவினர்: அவருடைய ஒரு மருமகள் சரிவர நடந்துகொள்ளாதால் அவர்களைத் தனியாகச் செல்லும்படி கூறிவிட்டார். ஆனாலும், அவர்களை பிறர் விமர்சனம் செய்வதை இவர் தாங்கிக் கொள்ளமாட்டார். அவர்களை நல்லவிதமாகப் பேணுவதும்  தமது கடமை என்று எண்ணுவார். ஆனால், அவரது மகன் அவருக்குப் பிறகு குடும்பக் கடமைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாவிடினும் , மகனுக்காக அதை ஏற்றுக் கொள்வார். அவர் யாருடனும் அதிக நேரம் பேசுவதில்லை. தமது  வேலைகளை தானே செய்து கொள்ள விரும்புவார்.கோபமாக இருக்கும் போது சாப்பிட விரும்ப மாட்டார். அவர் வேலைகளை அவரே சுதந்திரமாக செய்ய விரும்புவார். ஏழைகளுக்காக ஒரு இலவச மருத்துவமனை கட்ட விரும்பினார். சமுதாயத்தில் உள்ள ஏழை மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர். அதனால் , அடிக்கடி இரத்த தானமும் செய்வார். அவருக்கு புகழ்ச்சி (FAME ) பிடிக்காது.

ஒட்டுமொத்தக் குறிகளின் தொகுப்பு (TOTALITY OF SYMPTOMS):

Ø  குடும்ப உறவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ( FAMILY ORIENTED)
Ø  உதவி செய்யும் குணம் / கருணை உள்ளம் படைத்தவர் (HELPING NATURE/SYMPATHETIC).
Ø  சமுதாயப்பணி செய்வதில் விருப்பம்
Ø  கடுமையான உழைப்பாளி ( INDUSTRIOUS)
Ø  கைவிடப்பட்டவர்-அம்மா சிறு வயதில் இறந்து விட்டார் (ABANDONED).
Ø  அடக்கமானவர் (RESERVED)
Ø  மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டவர்/ நேர்மையாளர் ( CONSCIENTIOUS).
Ø  பாதத்திலும் , கீழ் இமைகளிலும் நீர்வீக்கம்.
Ø  தாகமின்மை
Ø  முகத்தில் வியர்வை; சாப்பிடும் பொழுது அதிகரித்தல்.
Ø  வெப்ப உடல்வாகு (WARM BLOODED).

விளக்கம் (EXPLANATION):

அத்துயரர் எளிதில் திருப்தியடையாதவர் (FASTIDIOUS) என்று என்னுடைய அறையில் நுழையும் பொழுதே கவனித்தேன் . அடுத்து அவர் ஒழுக்கமானவர்(DISCIPLINED) . பேசுவது அரிது என்று அவரை பற்றி விசாரிக்கும் பொழுது உறுதியானது. திட்டமிட்டு செயல்படுபவர் (PLANNER) என்றும், வியாபாரநுணுக்கம் தெரிந்தவர் என்பதையும் , நல்ல உறவினைத் தொடர்பவர் (SULPHUR) என்பதையும் அவரது பேச்சின் மூலம் அறிய முடிந்தது. அதே சமயத்தில் தமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தந்தவர் . அவரது மூன்று குழந்தைகளையும் பொறியாளர், மருத்துவர் மற்றும் குத்தகைக்காரர் என்று நல்ல நிலைக்கு உயர்த்தியவர். இக்குணம் , அவரது குடும்பப் பொறுப்பினையும் (FAMILY ORIENTED) , கடமையுணர்ச்சியையும் காட்டியுள்ளது (KALI). அடுத்து, யாராவது அவருடன் முரண்படும்பொழுது வருத்தமடைகிறார். அதுமட்டுமல்லாமல் வியாபாராத் தோல்வி (BUSINESS FAILURE) அவரைப் பாதிக்கிறது. மேலும் பணம் சம்பந்தமான விசயங்களில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்கிறார். தான் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவதில் அவரது காலந்தவறாமை (PROMPT), குறித்த நேரத்தில் தரும் விசுவாசம்(LOYAL) போன்றவை மிகவும் சிறப்பான குணநலங்கள். அடுத்து அவர் சமுதாயத்தின் மீது மிகவும் கடமையுணர்ச்சியுடன் நடந்து கொண்டுள்ளார். பலமுறை இரத்ததானம் செய்துள்ளார். மற்றும் ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை கட்டவும் திட்டமிட்டுள்ளார். மேற்கூறிய அத்தனை குணநலன்களையும் கவனத்திற் கொண்டு தொகுத்துப் பார்க்கும் பொழுது அவருக்கு காலி-சல்பூரிக்கமே (KALI-S) சரியான மருந்தாக தேர்வு செய்யப்பட்டது.

இம்மருந்தைப் பற்றி ஜான் ஸ்கால்ட்டன் தமது " ஹோமியோபதி மற்றும் தனிமங்கள் " என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்;

" அவர்களது கருத்தும் செயலும் அடுத்தவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுப்பதாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவும் நல்ல இதயத்துடன் தியாகம் செய்பவராகவும் , பேச்சைச் சுருக்கி நிறைய வேலைகள் செய்பவராகவும் இருப்பார்கள். அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாக உதவும் தன்மையுடன் , குறிப்பாக நலம் குன்றிய நோயாளிகளுக்கு பெரிதும் உதவுவார்கள். ( இத்துயரர் ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை கட்ட விரும்புபவர்) . தம்மைப் போலவே  மற்றவர்களையும் நேசிப்பவர்கள். பல்சட்டில்லாவைப் போன்று இளகிய மனம் படைத்தவர்களாக இருப்பார்கள் ”.


மருந்தளிப்பு (REMEDY): இத்துயரருக்கு காலி-சல்பூரிக்கம் முப்பதாவது வீரியம் (30C) இல்லாததால் ஆறாவது வீரியத்தில் (6C)  ஒரு தடவை கொடுக்கப்பட்டது.


மருந்திற்குப் பிறகு துயரரின் எதிர் விளைவு (REACTION):

ஒரு வாரத்திற்குப் பிறகு அத்துயரரின் பாதத்தில் இருந்த நீர்வீக்கம் மறைந்துவிட்டது. இரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்திருந்தது. திரும்பவும் உயரவில்லை. முன்பு இருந்தது போன்ற சுவாசப் பிரச்சனையும் இல்லை. தளர்ச்சி மறைந்து சந்தோசத்துடன் காணப்பட்டார். மேலும் , அவரது சாப்பாட்டின் அளவும் அதிகரித்திருந்தது. அத்தகைய  மோசமான சூழ்நிலையில் காலி-சல்பூரிக்கம் குறைந்த வீரியத்தில் கொடுத்திருந்த போதிலும் அதனுடைய செயலாற்றல் மிக விரைவாகவும் , பிரமிக்கத்தக்க வகையிலும் இருந்தது.

மருந்துகளுக்கிடையே வேறுபாடு (DD):


பல்சட்டில்லா மருந்தும் , காலி-சல்பூரிகத்திற்கு இணையாக இந்தத் துயரரிடத்தில் தென்பட்டது. ஆனால் பல்சட்டில்லா துயரர் எளிதில் புண்படக் கூடியவராகவும் (SENSITIVE) , உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் (EMOTIONAL) , செயலற்ற தன்மையுடனும் ( LETHARGIC) இருப்பார்கள். மாறாக, காலி-சல்பூரிக்கம் அதிக சுறுசுறுப்புடனும் , குடும்பம் மற்றும் வியாபாரம் சம்பந்தமான குணநலன்களைப் பெற்றிருப்பார்கள். ஆகவே தான் காலி-சல்பூரிக்கம் மருந்து தேர்வு செய்யப்பட்டது. துயரரும் நலமடைந்தார்.