Monday 21 March 2016

தண்ணீர் குடிக்க பயமா இருக்கு !

அந்த ஆண் துயரருக்கு வயது 47. அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவரும் கூட. பொதுவாக ஹோமியோபதி மருத்துவர்களுக்கு சிகிச்சையளிப்பது என்பது சவாலான காரியமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்களுடைய நோய்க்குறிகளைக் கேட்டால் ஒரே குறி மொழியாக (RUBRICS) சொல்லுவார்கள். சமயத்தில் மண்டையப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஹி.ஹி.ஹி.

அவருக்கு வயிற்றில் உப்பிசம். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் செய்த பூரியையும் , பூரி மசாலாவையும் ஒரு பிடி பிடித்துள்ளார். அதிலிருந்து வயிறு உப்பிசமாகவே இருக்கிறது, அத்தோடு நல்ல தாகமும் இருந்துள்ளது. ஆனால் தண்ணீர் குடித்தால் வயிறு மேலும் பொருமிக் கொள்ளும் என்ற எண்ணத்தில் தண்ணீர் குடிக்கவே பயம். அதனால் , சிறுநீர் கழிக்கும் போது  சிறுநீர் மஞ்சளாகவும் , பிறகு சிறிது இரத்தம் கலந்தும் வெளியேறியுள்ளது.  அதனால் உடல் சூடாகியுள்ளது என்று எண்ணி இளநீரையும் , வெந்தயம் கலந்த நீரையும் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். ஆனால் , திரும்பவும் சிறுநீர் கழிக்கும் போது அதே நிலை தான். அத்தோடு வயிற்றின் இரு பக்கங்களிலும் இழுத்துப் பிடிப்பது போன்ற வலியும் ஏற்பட்டுள்ளது. அடுத்த முறை தண்ணீர் குடித்த பொழுது வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இப்போது அவருக்கு உண்மையில் மிகவும் பயமாகி விட்டது. ஏற்கனவே நக்ஸ்வாமிக்கா-30 மற்றும் கார்போ-வெஜ் 30 எடுத்துள்ளார் . ஒன்றும் பயனளிக்கவில்லை. இப்போது என் முன்னே உட்கார்ந்திருக்கிறார். அவருடைய  குறிகளைக் கவனமாக குறித்துக் கொண்டேன். மருத்துவர். S.R. பதக் அவர்களின் மருந்துகாண்  ஏட்டை அவர் கையில் கொடுத்து  அவரையே   அந்த ஒட்டுமொத்தக் குறிகளுக்குத் தகுந்த மருந்தை தேர்வு செய்யுமாறு கூறினேன். இதோ அந்தக் குறிகள்:   

ஒட்டுமொத்தக் குறிகள்:

URINE-Red (P-427): arn, ars,benz-ac,berb,bry,canth,chel,lept,lob,merc-c,sep,stram.

ABDOMEN- Drinking water, Agg ( Page-3) : ars, phos, zing.

ABDOMEN-Restlessness, uneasiness (Page-5): ars, calc, ip, phos, sep.

THIRST- But drinks , aversion to (Page-395): ars, hell, nux-v,stram.  

FOOD-Fat, oils –agg ( Page-161): ant-c,ars,calc,CARB-V,chin,CYC,ferr,graph,kali-m,lyc,nat-p, PULS,rob,sep,tarx.

VOMITTING- anxious (Page-448): ars, tab.




மருந்துத் தேர்வு:

மேற்கண்ட மொத்தக் குறிகளையும் உள்ளடக்கிய ஒரே மருந்து ஆர்சனிக்கம் ஆல்பம் (ARS) தான். அதை 30-வது (முப்பதாவது) வீரியத்தில் 06-08-2014 ந் தேதி ஒரு தடவை கொடுக்கப்பட்டது.

மருந்திற்குப் பின் விளைவுகள்:

அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரது உடல்  நிலையில்  எந்த  முன்னேற்றமுமில்லை. என்னிடம் சந்தேகத்தோடு வந்தார். மருந்து வேலை செய்வதாகத் தெரியவில்லையே சார்! என்றார். அவசரப்படாதீர்கள்! பொறுமையாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஹோமியோபதி மருத்துவர்களுக்கு பொறுமை இல்லையெனில் வெற்றிகரமான மருத்துவராக இருப்பது எப்படி?.   கடிந்து கொண்டேன் என்றே கூறலாம். அடுத்த இரண்டு நாட்களில் அவரது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படத் துவங்கியது. உடம்பில் உள்ள அத்தனை திசுக்களிலும் மருந்து வேலை செய்வதைத் தெரிந்து கொள்ள முடிகிறது  என்று தெரிவித்தார், அவரது வயிற்றில் உப்பிசமும் குறைந்து பசி உணர்வு ஏற்பட்டது. ஆனால் 09-08-2014 ந் தேதி அடர்த்தியான பால் ஒரு டம்ளர் குடித்துள்ளார். உடனே பழைய குறிகள் மீண்டும் திரும்பி வரத் தொடங்கின. அதை என்னிடம் கூறுவதற்குத் தயங்கி எங்களது நண்பர் மரு. PKS அவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கார்போ-வெஜ் 30 போடுமாறு கூறியுள்ளார். அன்று இரவு அவரது தொல்லைகள் சிறிது குறைந்துள்ளது. முத்தாய்ப்பாக 11-08-2014 ந் தேதி இரவு ஒரு மணிக்கு சிறுநீர் கழிக்க எழுந்துள்ளார். சிறுநீரோடு சேர்ந்து அந்த சிறுநீரகக் கல்லும் சட்டென்று விழுந்து உள்ளது. நம் மருத்துவருக்கு அப்போது தான் விளங்கியுள்ளது. ஆகா! நமது தொல்லைகள் அனைத்திற்கும் காரணம் இந்த சிறுநீரகக்கல் தான். அதை ஆர்சனிக்கம் ஆல்பம் தான் வெளியேற்றி உள்ளது என்று. அவருக்கு சந்தோசமும் நிம்மதியும் ஏற்பட்டது.

விளக்கம்:

இந்தத் துயரர் மிகவும் நேர்த்தியாக ஆடை அணிபவர். அத்தோடு மிகவும் சிக்கனமாக செலவு செய்பவர். சுலபத்தில் திருப்தி அடையாதவர். சந்தேகக் குணமும் உள்ளவர், அதனால் தான் மருத்துவத்திற்கு இடையில்  மருத்துவரை மாற்றி புதியவரை அணுகி உள்ளார். அதனால் இவரை  " ஆர்சனிக்கம் ஆல்பம் " தான் நலப்படுத்தியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.




1 comment: