Monday 21 March 2016

மூளைக்கட்டி(BRAIN TUMOUR)

மூளைக்கட்டி
(BRAIN TUMOUR)
ஆங்கிலம் : மருத்துவர். அமர் டி  நிகாம் ( Dr. AMAR D NIGAM )
(Source: HOMEOPATHY : The art of  rapid & gentle healing)


இது  "மூளைக் கட்டி"  முற்றிய நிலையில்சாவிற்குப் போராடிக் கொண்டிருந்த  இருந்த ஒரு துயரரின் கதை.  அந்தத் துயரர் நலமடைவார் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாத நிலையில் அவரை அரசாங்க மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்பி விட்டார்கள். நான் அவரை பரிசோதனை  செய்த போது பாதி உணர்வுடன் தான் இருந்தார். எனது கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை , அரிதாகவே பதிலளித்தார். அவருக்கு தலையில் உள்ளதிர்வு உணர்வும் (Tingling) , தூக்கக் கலக்கத்துடன் கூடிய கடுமையான தலைவலியும்  மற்றும் கடுமையான ஞாபக மறதியும் , பார்வை இழப்பும், மயக்கமும்  அத்துடன்  பக்கவாதமும் வந்து போய்க் கொண்டிருந்தது. அவர் எனது கேள்விகளுக்கு பதில் கூறும் நிலையில் இல்லாததால் அவரது மனைவியிடம் அத்துயரரின் பொதுவான நோய்கள் மற்றும் அவரது உடல் உளநிலை பற்றி வினவினேன்.

துயரின் மனைவி கூறிய விபரங்கள்:

அவருக்கு அவ்வப்போது வாந்தி ஏற்படும்; திட உணவினை அவரால் விழுங்க இயலாது. அதனால் உடலின் எடை குறைந்து அவரது பாதங்கள் வீங்கிவிட்டது. அவருக்கு தலைவலி ஏற்படும்போது தலையை நன்றாக விறுவிறுப்பு ஏற்படுகிற வகையில் அழுத்தித்தேய்த்தால் வலி குறையும்(Brisk head massage).  அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே அவருடைய அம்மா மற்றும் தம்பியுடனான உறவு மிகவும் கறை படிந்ததாக இருக்கிறது. அவர்களுடைய குடும்பத்தில் இவர் தான் மூத்தவர்.  குடுப்பத்திற்க்காக இவர் அதிகம் உழைத்தாலும் பாராட்ட வேண்டிய வேளையில் கூட அவரது அம்மா இவரை புறக்கணித்துள்ளதால் மிகவும் வருத்தத்தில் இருந்தார். உண்மையில் , தான் அடக்குமுறை அட்டூழியங்களுக்கு ஆளாகிவிட்டதாக உணருவார் ( Persecuted).

எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு; எங்களது வாழ்க்கை மிகவும் நன்றாவே இருக்கிறது. அவர் அன்பான தந்தையாகவும் , மனைவி நன்றாக கவனித்துக் கொள்ளும் கணவனாகவும் இருக்கிறார். அரசாங்கப் போக்குவரத்துத்  துறையில் வேலை பார்த்து வருகிறார். அத்தோடு அரசியல் மற்றும் தொழிலாளர் நலச்சங்கங்களிலும் செயலாற்றிக் கொண்டு வருகிறார்.  அவருக்கு மற்றவர்களுடன் தேர்ந்திருக்கப் பிடிக்கும். மற்றும் கடமை உணர்ச்சியுடன் பணிபுரிவதை அவர் மிகவும் விரும்புவார்.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு , அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கினார். அந்தக் கடனைத் திரும்ப செலுத்துவதில் அவருக்கு சிரமம் இருந்தது அதனால் கவலையுடன் இருந்தார்.  அதற்காக அவரது அம்மாவிடமும் , தம்பியிடமும் பண உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார் . ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். முன்பு அவர்களுக்குப் பணஉதவி தேவைப்பட்ட போதெல்லாம் இவர் உதவி செய்திருக்கும் போது, இவருக்கு பண உதவி தேவைப்படும்போது அவர்கள் மறுத்ததால் மிகவும் வருத்தத்துடன் இருந்தார். தன்னை மதிக்கவில்லை என்றும் தகுந்த சமயத்தில் தனக்கு உதவாமல் கைவிட்டு விட்டார்கள் என்றும் உணர்ந்தார். இந்த புறக்கணிக்கப்பட்ட நிலையே அவரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியிருந்தது.

பொதுவான உடற்குறிகள்:

தட்பவெப்பம்: குழிந்த உடல்வாகு; குளிர்ந்த காற்றால் பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மை.

விருப்பம்: ரொட்டி, பொறித்த உணவுகள் மற்றும் புகையிலை.

அவரது கணவரிடம் தென்பட்ட குறிகளைப் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்குள் நான் மருந்து அனுப்புவதாக அவருக்கு உறுதியளித்தேன். அதனால் அந்த துயரரின் நினைவோடு எனது வீட்டிற்க்குச் சென்றேன். அந்தத் துயரின் குறிகளை நன்றாக ஆய்வு செய்த பின்னர் அவருக்கு பிளம்பம் மெட்டாலிக்கம் – 30 அந்தத் துயரின் குறிகளை நன்றாக ஆய்வு செய்த பின்னர் அவருக்கு பிளம்பம் மெட்டாலிக்கம் - 30 வது வீரியத்தில் கொடுக்க முடிவு செய்தேன். ஆனால் நான் மருந்தைக் கொடுத்து அனுப்புவதற்கு முன்னாள் அத்துயரரின் உடல்நிலையில் பட்டென பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. அவருக்கு தொடர்ந்து பலமுறை வலிப்புகள்  ஏற்பட்டு முழுவதும் உணர்விழந்த நிலைக்குச் சென்று விட்டார். அதனால் அவருடன் இருந்தவர்கள் அவரை அருகில் இருந்த  வேறொரு மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளனர். அந்த மருத்துவர்,  துயரரை பரிசோதனை செய்துவிட்டு , மிகவும் அபாய கட்டத்தில் இருப்பதாகவும்  இன்னும்  இரண்டு  மணி  நேரத்திற்கே உயிரோடு இருப்பார் என்றும் கூறிவிட்டார். அதற்கிடையில் அவரது நண்பர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்களும் அங்கு வந்து கூடிவிட்டார்கள். அந்த மருத்துவரின் கருத்து அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சில தொழிற்சங்கத் தலைவர்கள் அவரவர் பணிபுரிந்த பணிமனைகளுக்குச் சென்று தங்களைவிட்டுப் பிரிந்து செல்லவிருக்கும் அத்துயரரின் மரணச் செய்தியைப் பல்வேறு பணிமனைகளிலும் உள்ள தகவல் பலகையில் எழுதித் தொங்க விட்டுவிட்டார்கள். இந்தத் தருணத்தில் தான் நான் கொடுத்தனுப்பிய பிளம்பம் மெட்டாலிக்கம் – 30 வது வீரியம் அவருக்கு கொடுக்கப்பட்டது.

துயரரின்  ஒட்டுமொத்தக்குறிகள் 

1.    குளிர்ந்த உடல்வாகு. (Chilly)
2.    விருப்பம்: பொறித்த உணவுகள், ரொட்டி.( Deasire: Fried, bread)
3.    நிறுவனங்களின் சங்கத் தலைவர் ( பிளம்பம்) [ Leaders of Organisation]
4.    கைவிடைபட்டநிலை  (Forsaken)
5.    மற்றவர்களுடன் சேர்ந்திருக்க விருப்பம் (Company desire for)
6.    தலைவலி: தேய்த்து விசைந்துவிடுவதால் குறைதல். (Headache > Massage)
7.    தலையிலும் , உடலின் பின் பகுதியிலும் உள்ளதிர்வு அல்லது உட்கிளர்ச்சி நிலை. (Tingling sensation in head and back).


மருந்திற்குப் பின் விளைவுகள்:

மருந்து நம்பிக்கையளிக்கிற வகையிலும் , விரைவாகவும் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. அவருக்கு வலிப்பு ஏற்படுவது உடனே நின்று விட்டது. மற்றும் அவரது சுவாசம் இயல்புநிலைக்கு திரும்பியது. அவர் அமைதியாக தூங்கிவிட்டார். அடுத்தநாள் , காலை வழக்கம் போல் எழுந்துகாலை உணவிற்காக தேநீரும், ரொட்டியும் கேட்டுள்ளார். அதே நாள் , நண்பகல் நேரத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தவும் , அவரது மனைவியிடம் திக்கம் விசாரிக்கவும் ஏராளமான போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் வந்து விட்டார்கள். அவர்கள் தயக்கத்துடன் துயறரைப் பற்றிக் கேட்ட பொழுது , அவர் உயிரோடு இருப்பதாகவும் , ஓய்வெடுத்துக்  கொண்டும் , தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் ஒன்றரை ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்திருக்கிறார். அவர்களது குடும்பத்தினர்களும் அவர் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் என்று எண்ணி , அவரது மரணத்தை இலகுவாக எதர் கொள்ளும் நிலைக்குத் தங்களை தயார் செய்து கொண்டார்கள். அந்தத் துயரர் உயிர் வாழ்வதற்கு கொடையாக மேலும் ஒன்றரை ஆண்டுகளை அளித்த ஹோமியோபதிக்கு தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.


No comments:

Post a Comment